கணேஷ் பஜனாவளி
தொகுப்பு மற்றும் ஆக்கம்
- அன்புடன் R.P.OM
அ த்திமுகத்தோனே அரனார் திருமகனே
சத்திக் கணபதியே சரிந்த வயிற்றோனே
காரானை மாமுகனே கணபதியே முன்னடவாய்
ஸ்ரீராமர் தன்மருகா செல்வக்கணபதியே
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனனே
வேழ முகத்தோனே விநாயகரே நான் சரணம்
********************************************************************************
********************************************************************************
*********************************************************************************பி ள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
தொகுப்பு மற்றும் ஆக்கம்
- அன்புடன் R.P.OM
அ த்திமுகத்தோனே அரனார் திருமகனே
சத்திக் கணபதியே சரிந்த வயிற்றோனே
காரானை மாமுகனே கணபதியே முன்னடவாய்
ஸ்ரீராமர் தன்மருகா செல்வக்கணபதியே
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனனே
வேழ முகத்தோனே விநாயகரே நான் சரணம்
********************************************************************************
அ ய்யா
கணபதி வாடா வா
ஐங்கர
கணபதி வாடாவா
ஆணை
கணபதி வாடா வா
அசைந்தே அழகாய்
வாடா வா
மஹா
கணபதி வாடா வா
மங்கள
கணபதி வாடா வா
மூஷிக
வாகனா வாடா வா
மூல பிரம்மமே
வாடா வா
ராஜா
கணபதி வாடா வா
ராஜ
கணபதி வாடா வா
வள்ளல்
கணபதி வாடா வா
வல்லாள
கணபதி வாடா வா
வீம
கணபதி வாடா வா
வில்லாள
கணபதி வாடா வா
- அன்புடன் R.P.OM[அடியேன் முயன்றது ]********************************************************************************
கணபதி ஜய ஜய
சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜய ஜய
சீரிய வானைக் கன்றே ஜய ஜய
அன்புடை அமரரைக் காப்பாய் ஜய ஜய
ஆவித் துணையே கணபதி ஜய ஜய
இண்டைச் சடைமுடி இறைவா ஜய ஜய
ஈசன் தந்தருள் மகனே ஜய ஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜய ஜய
ஊர்நவ சந்தி உகந்தாய் ஜய ஜய
எம்பெரு மானே இறைவா ஜய ஜய
ஏழுகுலந் தொழ நின்றாய் ஜய ஜய
ஐயாக் கணபதி நம்பியே ஜய ஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜய ஜய
ஓங்கிய வானைக் கன்றே ஜய ஜய
ஒளவியமில்லா அருளே ஜய ஜய
அக்கர வஸ்த்து ஆனவா ஜய ஜய
கணபதி என்வினை களைவாய் ஜய ஜய
ஙப்போல் மழுவொன் றேந்தியே ஜய ஜய
சங்கரன் மகனே சதுரா ஜய ஜயஞய
ஞய நம்பினார் பாலாடிய ஜய ஜய
இடம்படு விக்கின விநாயகா ஜய ஜய
இடம்படு விக்கின விநாயகா ஜய ஜய
இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜய ஜய
தத்துவ மறைதெரி வித்தகா ஜய ஜய
நன்னெறி விக்கின விநாயகா ஜய ஜய
பள்ளியி லுறைதரும் பிள்ளாய் ஜய ஜய
மன்று ளாடும் மணியே ஜய ஜய
இயங்கிய ஞானக்குன்றே ஜய ஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜய ஜய
இலவங் கொம்பொன் றேந்தியே ஜய ஜய
வஞ்சனை வலவுந் தீர்ப்பாய் ஜய ஜய
அழகிய ஆனைக் கன்றே ஜய ஜய
இளமத யானை முகத்தாய் ஜய ஜய
இரகுபதி விக்கின விநாயகா ஜய ஜய
அனந்த லோடாதியில் அடிதொழ அருளே ஜய ஜய
-ஒளவையார்
*******************************************************************************
ஓம் கணேச ஓம் கணேச
ஓம் கணேச பாஹிமாம்
ஓம் கணேச ஓம் கணேச
ஓம் கணேச ரக்ஷ்மாம்
ஜெய கணேச ஜெய கணேச
ஜெய கணேச பாஹிமாம்
ஜெய கணேச ஜெய கணேச
ஜெய கணேச ரக்ஷ்மாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச
ஸ்ரீ கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச
ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்
ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்
ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்
ஜெய கணேச பாஹிமாம்
பிள்ளையார் பிள்ளையார் எம்மைக் காக்கும் பிள்ளையார்
ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆனைமுகம் கொண்டவர் ஐந்த கரங்கள் உடையவர்
பானைவயிறு படைத்தவர் பக்தர்குறை தீர்ப்பவர்
பொன்னினாலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து மர்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கிவைக்கும் பிள்ளையார்
கலியுகத்தில் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின்மீது ஏறியே இஸ்டம்போல சுற்றுவார்
பாடிப்புகழும் பக்தரின்; பாவம் போக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின் குறைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஜெயகணேச ஜெயகணேச ஜெயகணேச பாகிமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரச்சமாம்.
*********************************************************************************
முருகனுக்கு மூத்தவனே
ஆற்றங்கரை மீதிலே அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆனைமுகம் கொண்டவர் ஐந்த கரங்கள் உடையவர்
பானைவயிறு படைத்தவர் பக்தர்குறை தீர்ப்பவர்
பொன்னினாலே செய்யினும் மண்ணினாலே செய்யினும்
ஐந்தெழுத்து மர்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கிவைக்கும் பிள்ளையார்
கலியுகத்தில் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின்மீது ஏறியே இஸ்டம்போல சுற்றுவார்
பாடிப்புகழும் பக்தரின்; பாவம் போக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின் குறைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஜெயகணேச ஜெயகணேச ஜெயகணேச பாகிமாம்
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரச்சமாம்.
*********************************************************************************
சித்தி புத்தி விநாயகனே
சிங்காரக் கணபதியே
முக்தி தரும் மூலவனே
மூஷிக வாகனனே.
அரசமரம் உன் வீடு
ஆலயங்கள் தனி வீடு
கரங்கள் ஐந்துடனே
காத்திட வந்திடுவாய்
மஞ்சளிலே நீ வருவாய்
மாட்டு சாணத்திலும்
கொஞ்சியே நீ வருவாய்
கும்பிட அருள் தருவாயே
மாம்பழம் பெற்றவனே
மனக்கவலை தீர்ப்பவனே
ஓமெனும் மந்திரத்தின்
ஒலி வடிவானவனே முருகனுக்கு மூத்தவனே
முக்கண்ணன் பெற்றவனே
கருணைக் கைக்கொடுக்கும்
கணபதியே காப்பாவாய்
காரியங்கள் தொடங்கையிலே
கருணைக் கைக்கொடுக்கும்
கணபதியே காப்பாவாய்
காரியங்கள் தொடங்கையிலே
கைகொடுக்க நீ தெய்வம்
ஆயிரம் வெற்றிகளை
அள்ளிக் குவித்திடுவாய்.
குளக்கரையில் குந்திடுவாய்
குடும்பங்கள் காத்திடுவாய்
நலமெல்லாம் சேர்த்திடுவாய்
நாட்டை காத்திடுவாய்
கொம்பொடித்து போர்செய்தவனே
கொம்பொடித்து எழுந்திடுவாய்
நம்பிக்கை வளர்த்திடுவாய்
தும்பிக்கை காத்திடுமே !
எதுகை மோனை எனக்கு சரியா பிடிக்கல திருத்தம் பண்ணுவோர்
அழைக்கவும் 8056156496
குளக்கரையில் குந்திடுவாய்
குடும்பங்கள் காத்திடுவாய்
நலமெல்லாம் சேர்த்திடுவாய்
நாட்டை காத்திடுவாய்
கொம்பொடித்து போர்செய்தவனே
கொம்பொடித்து எழுந்திடுவாய்
நம்பிக்கை வளர்த்திடுவாய்
தும்பிக்கை காத்திடுமே !
எதுகை மோனை எனக்கு சரியா பிடிக்கல திருத்தம் பண்ணுவோர்
அழைக்கவும் 8056156496